தமிழ் மொழி - Tamil Language
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்தும் நம் தமிழ் மொழி பல்வேறு காலநிலைகளைத் தாண்டி ஓங்கி உயர்ந்து இருக்கிறது. செந்தமிழ், பைந்தமிழ், சங்கத்தமிழ், நற்றமிழ் என அதன் பண்பைக் கொண்டு பற்பல பெயர்களும் அதிக எழுத்துக்களும் கொண்ட மொழி என்ற பெருமையும் உண்டு.
Tamil Language, known to be the oldest of all languages had many significant evolutions over the past 10000 years. There are stances like Senthamil, Paindhamil, Sangathamil, Nattramil which describes the antiquites of Tamil Language.
தமிழ் பற்றி மேலும் அறிவோம் : More About Tamil
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன, அஃது
உயிர் எழுத்து - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - 12,
மெய் எழுத்து - க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் - 18,
உயிர்மெய் எழுத்து - 216,
ஆய்த எழுத்து - ஃ - 1 எனப் பிரிக்கலாம்.
ஆக மொத்தம் - 12+18+216+1 = 247 எழுத்துக்கள்
Tamil Language is composed of 247 letters, divided as follows
Uyir eluthu(vowels) - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள - 12
Mei eluthu(consonants) - க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் - 18
Uyirmei eluthu(consonant vowels) - 216
Aidham - 1
உயிர்மெய் எழுத்துக்கள் பிறந்த விதம்: Birth of Tamil Letters
தமிழ் எழுத்து மொத்தமும் கணிதமே உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்ததே உயிர்மெய்யெழுத்து, இதனை நாம் க்+அ=க, கணித சூத்திரத்தால் அறியலாம்.
Adding a vowel and consonant gives birth to a new letter called vowel consonant. i.e க்+அ=க where க் is vowel, அ is consonant = க is vowel consonant
பிரிவுகள் : Types
தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்கும் போது உண்டாகும் ஒலி அளவை(மாத்திரை) கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் இரு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
குறில் - அ, இ, உ, எ, ஒ
நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
வல்லினம்:
மெய்யெழுத்துக்கள் பதினெட்டில், முயற்சியுடன் வலித்து ஒலிக்கப்படும் க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு எழுத்தும் வல்லினம் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது மூச்சுக் காற்று மார்பிலிருந்து வலுவாக வருகிறது.
மெல்லினம்:
அதிக முயற்சியின்றி மூக்கினால் மெலிந்த ஓசையுடன் ஒலிக்கப்டும் ங், ஞ், ண், ந், ப், ன் என்ற ஆறு எழுத்தும் மெல்லினம்.
இடையினம்:
மூக்கிற்கும் மார்புக்கும் இடையே மிடற்றினின்றும் ஒலிக்கப்படும் ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு எழுத்தும் இடையினம்.
ஆய்த எழுத்து:
ஆய்த எழுத்துக்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பல பெயர்கள் உண்டு.
Depending on the duration of utterances of the letters, They are classified as follow
Vowels:
There are 12 vowels in Tamil Language. They are divided into two types
Short Vowels (kuril) : அ, இ, உ, எ, ஒ
Long Vowels (nedil) : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
Consonants:
There are 18 consonants in Tamil Language. They are divided into three types
vallinam வல்லினம்) க், ச், ட், த், ப், ற்
mellinam (மெல்லினம்) ங், ஞ், ண், ந், ம், ன்
idayinam (இடையினம்) ய், ர், ல், வ், ழ், ள்
Aayudham:
There is only one letter in aayudham namely ஃ
ஆதாரங்கள்: Proof
1. கி.மு. 6000 ஆண்டு வாழ்ந்த தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் “அகரம் முதல் னகர இறுவாய்…” என்றார்.
2. 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர் தனது திருக்குறள் நூலை “அகர முதல…” என தொடங்கினார்.
3. மகாகவி பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என இரு வரியில் தமிழ் மொழியைப் புகழ்ந்தார்.
4. தஞ்சைப் பெரிய கோவில், மாமல்லபுறச் சிற்பங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கீழடி, குமரிக் கண்டம் எனத் தமிழ் புகழ் பாடும் நினைவுச் சின்னங்கள் பல உள்ளன.
1. Tholkappiyar, lived in B.C 6000 had wrote about tamil language in his book Tholkappiyam.
2. Thiruvalluvar started his book Thirukkural by அகர முதல… around 2000 years ago.
3. Bharathiyar, a well known freedom fighter commented tamil language is the best-ever language over all the ages.
4. There are many literary and monumentorial works that portrays the beauty of tamil to name a few, Thanjai Brihadeeswarar Temple, Mahabalipuram Temple, Madurai Meenakshi Temple, Keeladi, Aathichanallur, Kumari Kandam etc.,
Watch our Exclusive video on Katradhu Tamil!
அடுத்த தலைப்பு: Next Topics
தமிழ் எழுத்து வரலாறு, தமிழ் எண்கள், அறிய வேண்டிய தமிழ் வார்த்தைகள்.
History of Tamil Language, Tamil Numbers, Tamil words to know.
நன்றி: இவன் பக்கம், Wikipedia , Tamilnation