தமிழனின் வர்மக்கலைகள் பற்றி வெளியான முதல் திரைப்படம்
சமூக பிரச்சனைகளான பெண்கள் அநீதி, சிறு பிள்ளைகள் வன்கொடுமை நம் நாட்டில் ஒரு புற்று நோய் செல் போல நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு தீர்வு என்ன என்று நினைத்தால், அவர்களாக தான் மாற வேண்டும் என்பர். பொதுவான மக்களும் நம்மால் என்ன முடியும் என்று நினைத்து, தனக்கு நடக்காதவரை நல்லது என அநீதிகளின் மீது பயணிக்கிறோம். இந்த நிலை நீடித்தால் ஒரு நாள் நாம் மனித உருவில் உள்ள விலங்கினம் அல்லது அதனினும் கீழினம் எனும் நிலையை அடைய நேரிடும், இதற்கு மாற்றம் காண நமக்கு போராட்டமோ பரிதாவமோ தேவை இல்லை. நமது பழமையை மீட்டு எடுக்க வேண்டும். அதுவே அனைத்திற்கும் தீர்வாக அமையும். மனிதன் மனிதனாகவே பயணிக்க நாம் நம் பழமைக்கு புதுமை சேர்க்கவேண்டும். இது அனைத்திற்கும் மாற்றமாக அமைந்ததே தமிழனானேன், தமிழ் வர்மக்கலை தொடர்புடன் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம்.
"தமிழ் வர்மக்கலைகள்
பற்றிய முதல் தமிழ் திரைப்படம்"
தமிழரின் கலைகள் தொடர்பான உலகின் முதல் தமிழ் படத்தை தயாரித்து முதல் படத்திலேயே புதுமையை வெளிக்காட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் திரு. சதிஷ் ராமகிருஷ்ணன். 8 அறிய தமிழ் கலைகளை இப்படத்தின் வழியாக உலகம் அறிய செய்து மாபெரும் சாதனையையும் நிகழ்த்தி உள்ளனர் படக்குழுவினர். இது வரை எந்த ஒரு திரைப்படத்திலும் கண்டிராத உண்மையான சண்டைக்காட்சிகள் எந்தவொரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி துணிச்சலாக செய்து முடித்து உள்ளனர் நமது பட்டதாரி மாணவர்கள். படத்தை பற்றி படக்குழுவினர் கூறும் போது, "இது தொலைந்து போன தமிழ் கலைகளை மீட்டு எடுக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு தொடக்கமே" என்கின்றனர். தமிழனானேன் அனைத்து தயாரிப்பு வேலைப்பாடுகளும் முடிந்து வெகு விரைவில் திரையில் விருந்து அளிக்க காத்துக்கொண்டு இருக்கிறது.
தமிழனானேன்.க Exclusive Teaser:
தமிழனானேன் - பெண்களின் பங்கு:
வீரத்திற்கு பெயர்பெற்றவர்கள் தமிழர்கள் இதில் பெண்களும் அடங்குவார்கள், இதற்கு சான்றாக "முறத்தால் புலியை விரட்டிய பெண்", கல்வியும் வீரமும் கொண்டு நாட்டையே ஆண்ட வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதைய தலைமுறையும் அதே வீரத்தை கொண்டு இருந்தால் மட்டுமே இன்று நிலவும் பெண்கள் வன்முறை தொடர்பான தீர்வு காண முடியும். இத்திரைப்படத்தின் வாயிலாக பெண்கள் அறிய வேண்டிய கலைகள் என்னென்ன, அஃது எவ்வளவு முக்கியம் என்பதனை தெளிவாக விளக்குகிறது.
தமிழனானேன் படத்தில் உள்ள சில காட்சிகள்:
தமிழனானேன் பட பாடல்கள்: