WhatsApp Chat
தமிழ் டி-ஷர்ட் Logo

நாம் அன்றாட உபயோகிக்கும் ஆங்கிலத்திற்கு மாற்றமான தமிழ் சொல்

ஆங்கிலத்திற்கு மாற்றாக தமிழ் சொற்கள்

இதற்கு முந்தைய பதிப்பில் நாம் நமது தினசரி உணவு முறையில் பயன்படுத்திய ஆங்கில சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லை அறிந்தோம். இந்த பதிப்பில் மேலும் ஒரு படிச் சென்று இன்று உலக அளவில் அனைத்து மொழியினராலும் பயன்பாட்டில் இருந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப செயலிகளாக விளங்கும் WhatsApp, Messenger, Wifi போன்றவற்றிற்கான தனி தமிழ் சொற்கள் 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் மலேசியா நாட்டில் நடைபெற்ற 9-வது தனித் தமிழியக்க மாநாட்டில் நுட்பவியல் கலைச் சொற்கள் தமிழில் வெளியிடப்பட்டது.

அவற்றுள் சிலவனவற்றை நாம் இப்பதிவில் அறியலாம்.

1. WhatsApp - புலனம்

2. youtube - வலையொளி

3. Instagram - படவரி

4. WeChat - அளாவி

5.Messenger - பற்றியம

6.Twitter - கீச்சகம்

7.Telegram - தொலைவரி

8. skype - காயலை

9.Bluetooth - ஊடலை

10.WiFi - அருகலை

அமெரிக்கர் தானும் தமிழ் கற்று

மற்றவருக்கும் பயிற்றுவித்தால்?

 

 

 

 

தமிழ் மொழியை நாம் வேறு மொழி கலந்து பேச, பெர்னார்ட் பேட் (Bernard Bate) எனும் அமெரிக்கர் தமிழ் மொழி மீதான மிகுதியான ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழியை தானும் கற்று அதனை இலக்கண பிழை இல்லாமல் பேசினார், தான் பேசியது மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் தமிழ் மொழியின் சிறப்பினை பகிர்ந்து அதனை கற்பித்தார். அவரது தமிழ் உச்சரிப்பை பார்த்து வியக்காத தமிழர் இங்கு இல்லை,

 

 

11.Hotspot - பகிரலை

12.Broadband - ஆலலை

13.Online - இயங்கலை

14.Offline - முடக்கலை

15.Thumbdrive - விரலி

16.Hard disk - வன்தட்டு

17.GPS - தடங்காட்டி

18.cctv - மறைகாணி

19.OCR - எழுத்துணரி

20 LED - ஒளிர்விமுனை

21.3D - முத்திரட்சி

22.2D - இருதிரட்சி

23.Projector - ஒளிவீச்சி

24.printer - அச்சுப்பொறி

25.scanner - வருடி

26.smart phone - திறன்பேசி

27.Simcard - செறிவட்டை

28.Charger - மின்னூக்கி

29.Digital - எண்மின்

30.Cyber - மின்வெளி

31.Router - திசைவி

32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail சிறுபடம்

34.Meme - போன்மி

35.Print Screen - திரைப் பிடிப்பு

36.Inkjet - மைவீச்சு