தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலம்
தமிழி தோன்றிய காலம் :
தமிழி எழுத்து (காலம் : கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு) - தமிழ் வட்டெழுத்து (காலம்: கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு) - தமிழ் எழுத்து(இன்றைய தமிழ் எழுத்து). ஆய்வுக் கட்டுரைகள் தமிழி எழுத்துமுறை கி.மு.5ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும் மற்ற பிராமி எழுத்துமுறைகள் கி.மு. 3ம் நூற்றாண்டு காலத்துக்குரியன எனவும், அதாவது அசோகருக்கு பிற்பட்ட அல்லது ஆரம்ப மௌரியப் பேரரசு (சுமார் கி.மு. 322-185) காலத்துக்குரியவை என பொதுவாகக் கருதப்படுகின்ற.
கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துகளின் பெயர்கள் பட்டியல் இடப்பெற்று உள்ளன. அவற்றுள் தமிழி என்பதும் ஒன்று. எனவே குகைக் கல்வெட்டு எழுத்துகளைத் தமிழி என்றே குறிப்பிடுவோம். தமிழி எழுத்து வடிவங்களைக் கீழே இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.
முதலில் அசோகன் கல்வெட்டுகளில் இவ்வரிவடிவம் படிக்கப்பட்டதால், இது அசோகன் பிராமி என்று சுட்டப்பட்டது. இவ்வெழுத்து வகைக்கும், தமிழகத்தில் கிடைத்த எழுத்து வகைக்கும் இருந்த ஒற்றுமை காரணமாகவும், அதே வேளையில் தமிழக எழுத்துகளில் சில வேற்றுமைகள் இருந்ததனாலும், இவ்வேறுபாட்டைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்பிராமி’ என்று அறிஞர்களால் அழைக்கப்படலாயிற்று.
தொல்தமிழ் காணப்படும் இடங்கள் :
தமிழகத்தில் இயற்கையாக அமைந்த மலைக் குகைகளில் அமைந்த பாறைகளிலும், முகப்புகளிலும், சமண சமயத்தார் பயன்படுத்தும் கற்படுக்கைகளுக்கு அருகிலும் இவ்வகை எழுத்திலமைந்த கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சங்க காலச் சேரர் பாண்டியர் வெளியிட்ட காசுகளிலும், தமிழக அகழாய்வுகளிலும், மேற்பரப்பு ஆய்வுகளிலும் கிடைத்த முழு / உடைந்த மட்பாண்டங்களிலும் இவ்வெழுத்துகள் இடம்பெறுகின்றன. இத்தகைய மண்பாண்டப் பொறிப்புகள், கடல்கடந்த நாடுகளிலும் கிடைத்திருப்பது தமிழரின் பரவலுக்குச் சிறந்த சான்றாகவும் உள்ளது. செங்கடற் பகுதியிலமைந்த எகிப்தியத் துறைமுகங்களான குவைசர் அல் காதிம், பெரணிகே ஆகியவற்றில் நடந்த அகழாய்வுகளிலும், தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் உள்ள குவந்லுக் பத் என்ற இடத்தில் கிடைத்த பொன் உரைகல் ஒன்றின்மீதும் இவ்வெழுத்தில் அமைந்த தமிழ்ப் பெயர்ப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.
தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் :
பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் தமிழ்மொழியை எழுத வட்டெழுத்து வடிவம் பயன்படுத்தப் பெற்றுள்ளது. அதே காலத்தில் பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த பகுதியில் தமிழ் எழுத்து வடிவங்களில் தமிழ்மொழி எழுதப் பெற்றுள்ளது. மன்னர்களுக்கு இடையே நிகழ்ந்த போர்களின் விளைவான ஆட்சி பரவலினால் வட்டெழுத்தில் எழுதும் முறை தமிழகம் முழுவதும் பிற்காலத்தில் பரவியுள்ளது. தமிழ் எழுத்து, வட்டெழுத்து ஆகியவற்றிற்கு இடையே எழுத்து எண்ணிக்கை நிலையில் வேறுபாடு இல்லை. எழுத்துகளை எழுதும் முறையில்தான் வேறுபாடு காணப்பெறுகின்றது. இரு எழுத்து வடிவங்களுக்கும் உரிய வரிவடிவ அட்டவணைகளின் வாயிலாக இதனை அறியலாம்.
Image Credits - Dinamani News
தமிழ் நாட்டில் தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்க பட்ட இடங்கள் :
1.ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு.
2.கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.
3.கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ. துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.
4.தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் "மு-ன-க-ர" எனவும் "மு-ஹ-க-டி" எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.
5.விருத்தாசலம் அருகே தர்மநல்லூரில் தமிழ் பிராமி எழுத்துக்களோடு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழி எழுத்துக்கள் : தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளதை போன்று தமிழியிலும் 247 எழுத்துக்கள் உள்ளன. 2000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய அந்த எழுத்துக்களை வாசகர்களுக்காக நாங்கள் சேகரித்து இந்த பதிவில் இணைத்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து பயன்பெறுக.
அனைத்து தமிழி எழுத்துக்களும் அடங்கிய இணைய பதிவு : Click Here to Download