இணையத்தில் வாயிலாக வெற்றி கண்ட தமிழர்கள்
இணையதள புரட்சியை முதன்முதலில் கண்ட நாடு அமெரிக்கா, இதனை .COM புரட்சி என்று சொல்வர். அந்த காலகட்டத்தில் இந்த தொழிலில் கால்பதித்த பல நிறுவனங்கள் இன்று அமோக வெற்றியை ருசித்து வருகின்றன, அதன் எடுத்துக்காட்டு தான் google.com, amazon.com போன்றவை. இன்டர்நெட் சேவை எப்போது இந்தியாவிற்கு கிடைக்கத் தொடங்கியதோ அப்போதே இந்த புரட்சி நம் நாட்டிலும் தன் பலத்தை காண்பிக்க தொடங்கிவிட்டது. இது போன்று இணையதளம் மூலம் வெற்றி பெற்றவர்களின் கதைகள் பலவற்றை நாமும் அறிந்திருப்போம்.
இன்று நமக்கான வாய்ப்பும் ஒளிமயமாக தெரிகிறது, இத்தொழிலில் தமிழர்கள் கால்பதித்து சிலகாலங்கள் தான் ஆகின்றன, இந்திய அளவில் முன்னோடி நிறுவனம் என்று சொல்ல வேண்டும் என்றால் Bharathmatrimony.com தளத்தை தான் குறிப்பிட்டு சொல்ல முடியும். அந்த அளவிற்கு இன்று அசைக்கமுடியாத உயரத்தை எட்டியுள்ளது. எனினும் இணைய வர்த்தகம் என்று பார்த்தல் முன்னோடியாக உள்ள flipkart.com, amazon.in போன்ற தளங்களை எந்த ஒரு தமிழர் நிறுவனமும் இன்னும் வளர்ந்து கோலோச்சிவில்லை. எனினும் இன்னும் சில வருடங்களில் நிலைமை நமக்கு சாதகமாக மாற பல வாய்ப்புகள் உள்ளன. அதன் முன்னோட்டம் தான் இந்த பதிவு.
தமிழர்கள் வளர்ந்து வந்த பாதையில் மாற்றியோசித்து, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு புதுப்புது யுக்திகள் மூலம் இணையவழியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். எங்களுக்கு தெரிந்த அசத்திவரும் 5 வணிக இணையதளங்களை பற்றி இந்த கட்டுரையில் பதிவுசெய்துள்ளோம்.
1. Halwakadai.com - இணைய திருநெல்வேலி அல்வா கடை
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த திரு. மோசஸ் தர்ம பாலன் தனது மேற்படிப்பை படிக்க சென்னை வந்திருக்கிறார், அவர் படித்துவந்த வணிக நிர்வாக துறை சார்பாக இறுதியாண்டில் நடைபெற்ற போட்டியில் அல்வா விற்பனை கடை ஒன்றை அமைத்து முதல் மாணவராக வெற்றிபெற்றார். அந்த அனுபவத்தில் கிடைத்த நம்பிக்கையில் Halwakadai.com என்ற இணையத்தை தன் நண்பர்கள் உதவியுடன் துவங்கியுள்ளார்.
சமீபத்தில் நம் பார்மபரிய நாட்டு கருப்பட்டியை பயன்படுத்தி முதன் முறையாக "கருப்பட்டி காப்பி" அறிமுகம் செய்தனர், அதன் சுவையை அனுபவித்தவர்கள் "ஆஹா" அமிர்தத்தை பருகிய சுகத்தை பெற்றவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.
திருநெல்வேலி அல்வாவின் சுவை அறியாதார் தமிழகத்தில் யாரும் இல்லை., தமிழகத்தின் பாரம்பரிய சுவையான இந்த உலக புகழ் பெற்ற அல்வாவை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்று தங்கள் கடினமான முயற்சியினால் வெற்றி கண்டனர். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் இணையத்தில் கூட்டம் அலைமோதும். இவர்களின் வளர்ச்சியை கண்டு பலர் இதே முயற்சில் இறங்கி சிலர் வெற்றியை கண்டனர், ஆனால் ஒரு தொழிலை அதன் நுணுக்கம் தெரிந்த விடாமுயற்சியுடன் நல்ல தரத்தை காப்பாற்றிவந்தால் தான் அது நிலைக்கும், இதன் படி இன்றும் இணையத்தில் முதன்மையான இடத்தில அல்வா விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் இவர்களையே சாரும். தினமும் திருநெல்வேலியில் இருந்து நேரடி பார்வையில் தயாரித்து, தர பரிசோதனை, சுவை பரிசோதனை என எல்லாம் முடித்து முதல் தர அசல் பாரம்பரிய அல்வா மட்டுமே சென்னை, கோவை என இந்தியா முழுவதும் அனுப்பி வருகின்றனர்.
தொடங்கிய முதல் 3 ஆண்டுகள் வரை இணையத்தில் மற்றும் விற்பனை செய்து வந்தவர்கள் கடந்த 2015 -ம் ஆண்டில் முதல் கடையை சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தொடங்கினர், பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது சென்னை அரும்பாக்கம், கொளத்தூர், வேளச்சேரி என பல பகுதிகளில் கிளைகள் திறந்து அசத்தி வருகின்றனர். இணையத்தில் பதிவு செய்தாலே போதும் சென்னைக்குள் அடுத்த நாளே சுவையான அல்வா இல்லம் தேடி வரும். அது மட்டுமின்றி பிஸ்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு வகைக்கு நகர்ப்புறங்களில் தெருவுக்கு தெரு கடை இருக்கும் போது, திருநெல்வேலி மண்ணிலே பிறந்து, அங்கேயே வளர்ந்த நாம் ஏன் அல்வாவை இது போன்று Brand செய்து விற்பனை செய்யக்கூடாது என்று எழுச்சி பெற்ற மோசஸ் மற்றும் அவர் நண்பர்கள் தங்கள் அடுத்த இலக்காக கூறியது எங்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் 2020-க்குள் 40க்கும் மேற்பட்ட தனித்துவமான விற்பனையகங்களை திறக்கவுள்ளோம்.
நாம் உழைக்கும் அளவிற்கே ஊதியம் கிடைக்கும். இது சரி தான் என்றே தோன்றுகிறது இவர்களது இடைவிடாத உழைப்பும், அவர்கள் இலட்சியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் பார்க்கும் பொழுது.
2. Nativespecial.com - பாரம்பரிய உணவுவகை இணையம்
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க உணவு பண்டங்கள் பல உண்டு, குறிப்பிட்டு சொன்னால் திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, நெய்வேலி முந்திரி, நாகர்கோயில் நேந்திர வாழை சிப்ஸ், சாத்தூர் காராசேவு என அடுக்கி கொண்ட போகலாம். அவ்வளுவும் தனிச்சுவை கொண்டவை, அதற்கு காரணம் அந்தந்த சூழலில் கிடைக்கும் மூல பொருட்களும், பாரம்பரிய கைப்பக்குவமும் தான். நம் வில்வா குழுமமும் முதன்முதலாக தொடங்க நினைத்த இணையதளம் இது போன்ற ஒன்று தான், எனினும் இதற்கான தேடல் என்பது அவ்வளவு எளிதல்ல, மிக கடினமாக உழைக்கவேண்டியிருக்கும், பல ஊர்களுக்கு நேரில் சென்று சேகரிக்கவேண்டும் என எண்ணி திட்டத்தை தள்ளி போட்டோம். அதே காலகட்டத்தில் Nativespecial.com தொடங்கப்பட்டநிலையில் அவர்களுக்கான ஆதரவை தரும் விதத்தில் இந்த கட்டுரையில் அவர்களை சற்றே முதன்மை படுத்திகாட்டியுள்ளோம்.
Nativespecial.com இணையத்தின் நிறுவன சகோதரர்களில் திரு.பாஸ்கர் அவர்கள் 2013 -ம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார், முதல் முறை சந்தித்ததே எங்கள் தமிழ் ஆடை ஒன்றை எங்கள் இணையம் வழியில் பதிவு செய்தமையால் நேரடியாக டெலிவரி செய்ய சென்றபோது தான். அருமையான மனிதர் தமிழருக்கே உரித்தான மரபுடன் தன் வீட்டிற்குள் அழைத்து பருக நீர் கொடுத்து உபசரித்தார், தான் செய்து வந்த ஐ.டி. வேலையை விட்டுவிட்டு முழுநேரத்தில் தங்கள் இணையத்தின் வளர்ச்சிக்கு உழைக்கப்போவதாக கூறினார். அன்று முதல் இன்று வரை ஒரு நல்ல நண்பராகவும், நலம் விரும்பியாகவும் உள்ளார்.
'சீடையை' மீட்டெடுத்த பெருமை இவர்களையே சாரும்....
Nativespecial.com இன் இலட்சியம், நலிந்து வரும் சிறுதொழில்களை கைதூக்கி விடவேண்டும் என்பதே, இதற்காக பல கிராமங்களுக்கும் பயணித்து அந்த ஊரின் சிறப்பு, அங்கு கிடைக்கும் உணவு வகை என தேடி பிடித்து நேரடியாக கொள்முதல் செய்து உலகம் முழுவதும் சந்தை படுத்திவருகின்றனர். நம் மரபை குறித்து கூறும்போது எண்ணெய் மூலம் பொரித்து, வறுத்து உணவை தயாரிப்பது என்பது பெரிதும் நம் வழக்கில் கிடையாது. உருண்டை வடிவில் சத்தான சிறுதானியங்களை, எள்ளு, கருப்பட்டி என உடலுக்கு நன்மை மட்டுமே தரும் இயற்கை பொருட்களை வைத்து எள்ளுருண்டை, கடலை மிட்டாய் என செய்து உண்டுவந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். இன்றும் பல விட்டுப்போன உணவுவகையான 'சீடையை' மீட்டெடுத்த பெருமை இவர்களையே சாரும்.
இன்று nativespecial.com இந்தியா மட்டும் மின்றி அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் சேவை தந்து வருகின்றனர், திரு. பாஸ்கர் அவர்களிடம் கேட்டபோது துபாய் மற்றும் அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார், எனினும் அங்கே உள்ளவர்கள் நம் உணவுவகைகளை மிகவும் தவறவிட்டுள்ளதால் எவ்வளவு மலிவாக கொடுக்க இயலுமோ, தங்கள் இலாபத்தையும் குறைத்துக்கொண்டு குறைந்த விலையில் தந்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். சமீப காலத்தில் அதிக மக்களால் விரும்பப்பட்ட உணவு பண்டம் எது ? என்று கேள்வியெழுப்பினோம், அதற்கு இந்த வருடம் கருப்பட்டி மைசூர் பாக் மற்றும் மலைத்தேன் அதிகம் விரும்பி வாங்கிவருகிறார்கள் என்றார்.
மேலும் இத்தொழிலில் வளர்ந்து வர வில்வா குழுமத்தின் சார்பாக வாழ்த்துகள்.
உங்களுக்கும் நம் பாரம்பரியமிக்க உணவு பண்டங்களை ருசிக்க ஆசையாக உள்ளதா ? உடனே சென்று பாருங்கள்.
3. Printfaast.com - இணைய பிரின்டிங் நிறுவனம்
இணையத்தின் வேகம் கூடக்கூட அதனால் பயன்பெறும் வாடிக்கையாளரின் என்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே இதனால் புதுப்புது தொழில்வாய்ப்புகள் பிறப்பதற்கும் பஞ்சமில்லை, நேரடி கண்பார்வையில் மட்டுமே செய்யும் வணிகமாக கருதப்பட்ட பல பொருட்கள் இன்று இணையம் வழியே சர்வசாதாரணமாக பெருமளவு விற்பனை செய்யப்பட்டுவருகிறது, ஒரு நிறுவனம் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தை பொறுத்தே அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் அமையும், அதிகம் மக்கள்தொகை உள்ள பகுதி, அதிக பொருளாதாரம், பணப்புழக்கம் உள்ள பகுதி என பல காரணிகள் உள்ளன வணிகங்கள் வெற்றியடைவதற்கு. அப்படி இருக்க, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை துனை கொண்டு, அசத்தி வரும் இணைய பிரின்டிங் நிறுவனம் தான் Printfaast.com - அதிவேக அச்சகம் என பெயர் பெற்ற நிறுவனம் தனது வெள்ளி விழாவை சென்ற ஆண்டு(2017 இல்) கொண்டாடியது.
Printfaast & Co நிறுவனத்தலைவர் திரு. முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர், கடலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி படிப்பைக் முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த இடத்தில், தன் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தால் ஒரு அச்சகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார், அப்போது அவருக்கு தெரிந்திருக்காது அந்த துறையில் தான் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் உருவாக்கப்போகிறார் என்று. தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தவர், அத்துறையின் நுணுக்கங்களை அறிந்து பின் சுயமாக தொழில் தொடங்க எண்ணி
வெறும் 1000 ரூபாயில் 1992 -ம் ஆண்டு தொடங்கிய Printfaast & Co., நிறுவனம், இன்று வருடந்தோறும் கோடிக்கணக்கில் வணிகம் செய்துவருகிறது.
சென்னை வேளச்சேரி பகுதியில் இவர்களின் அலுவலகம், அச்சகம் செயல்பட்டுவருகிறது. ஒரு தொழில் அது இருக்கும் பகுதியில் மட்டும் செயல்படாமல், உலகம் முழுவதும் அதன் சேவையை விரிவுபடுத்தவேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் சிறந்த வழி இணையம் மூலம் வணிகம் செய்வது தான், அதனை சரியாக பயன்படுத்தி Printfaast.com என்ற இணையதளம் மூலம், விசிட்டிங் கார்டுகள், Business cards, Brochures, pamplets, standees, banners, light boards போன்ற பிரின்டிங் சம்பந்தமான அனைத்து சேவைகளும் வழங்கிவருகிறார். டைரி, காலண்டர் (Dairies & calendars) தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் இந்நிறுவனம், இணையத்தில் பல வடிவங்களில் டைரிகள், காலண்டரைகள் வரிசைப்படுத்தியுள்ளனர். இணையம் வழியே பணம் செலுத்தும் வசதியுள்ளதால், ஆர்டர் செய்த சில தினங்களிலே இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் அனுப்பிவைக்கும் வசதிகளை செய்துள்ளனர்.
சென்னையின் முன்னோடி நிறுவனமாக வளர்ந்துள்ள printfaast.com தரத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிவேகமான முறையில் ஆர்டர்களை முடித்து தந்து பல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பும், நற்பெயரும் பெற்றுள்ளனர். நாச்சுரல்ஸ் சலூன், டிவிஎஸ் குழுமம், டாடா குழுமம், உலக வங்கி, இந்தியா சிமெண்ட்ஸ், இந்திய கடற்படை, விமானப்படை என பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் பிரின்டிங் சேவையை பெற்றுவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. Magizhkart.com - இணைய செம்பு பாத்திர விற்பனையகம்
நாம் ஆரோக்கியமாக வாழ பல வழிகளை முன்னோர்கள் கண்டுணர்ந்து சொல்லிவந்துள்ளனர். அதில் ஒன்று தான் செம்பு பாத்திரங்களின் பயன்பாடு. நாம் உண்ணும் உணவு, பழகும் மனிதர்கள் - இந்த இரண்டும் தான் நாம் வாழ்வில் ஏற்படும் பல மாறுதல்களுக்கு காரணம், நல்ல ஆரோக்கியமான உணவை அறிந்து உண்ணும் போது நம்மை எவ்வித நோயும் அண்டாது. மிகவும் அரிதாக கிடைக்கும் பொருட்களில் தூய செம்புபாத்திரங்களும் ஒன்று. நாம் செய்யும் தொழில் வெறும் பணம் ஈட்டும் கருவியாக மட்டும் அல்லாமல், அதன் மூலம் பலருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் இருத்தல் மிக முக்கியம். பொருளாதார நன்மைகளை தவிர்த்து நாம் விற்பனை செய்யும் பொருட்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை கொண்டு தொடங்கிய நிறுவனம் தான் இந்த magizhkart.in - அனைவரும் மகிழ்வித்து அதன் மூலம் நாமும் மகிழ்ச்சி அடைவோம் என்ற தாரக மந்திரத்தை வைத்து இயங்கும் இந்நிறுவனம் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைவர் திரு. கணபதி (33 வயது), ஐ.டி துறையில் பணியாற்றி வந்துகொண்டே, தனக்கு கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் பல சமூக பணிகளில் ஈடுபடுவந்தார், பனை விதைகளை சென்னையின் பல்வேறு இடங்களில் விதைத்து வந்துள்ளார், அதுமட்டுமின்றி அவர் வசிக்கும் ஆவடி பகுதியில் அண்ணனூர் எழுச்சி இளைஞர்கள் என்ற குழுவை அமைத்து விடுமுறை நாட்கள் அனைத்திலும் ஒன்றிணைந்து மரங்களை நடும் பணிகளில் ஈடுபட்டுவந்தார். சென்னை புயல் மட்டும் வெள்ளத்தின் போது இவர்கள் நட்ட மரங்கள் சிலவற்றை தவிர அனைத்தும் நல்ல வளர்ந்த நிலையில் எவ்வித பாதிப்பும் இன்றி இன்றும் கம்பீரமாய் வளர்ந்து வருகிறது. திரு.கணபதி அவர்கள் நம் வில்வா குழுமத்திற்கு அறிமுகமானது அவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது நம் தமிழ் ஆடைகளை கண்டு வியந்து நமது வாடிக்கையாளராக ஆனபோது தான். தற்போது தனது துணைவியாரின் ஒத்துழைப்புடன் magizhkart.in தளத்தின் மூலம் தினமும் பல வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியம் தரும் செம்பு பாத்திரங்களை விற்றுவருகிறார்.
இன்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என எங்கு ஆரோக்கியம், விவசாயம் சம்பந்தமான விழா நடைபெறுகிறதோ அங்கே magizhkart.in நிறுவனமும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதியுடன் கூறலாம்.
5. VangaAnnachi.com - இணைய மளிகை கடை
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் திரு. செல்வராஜ், பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி பின் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் தன் சொந்த ஊருக்கே திரும்பி சென்றார். சென்னைக்கு வந்த பல திருநெல்வேலி, தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் தான் இன்று சென்னையின் வணிகத்தின் முன்னோடியாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்க மீண்டும் சொந்த ஊரில் இருந்து என்ன செய்ய இயலும் என்று பலரும் கேட்டபோது, இன்றைய தொழில்நுட்ப வசதியால் நகரங்களில் இருந்து மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் இருந்தும், எந்த ஊரிலும் வணிகம் செய்யலாம். சரியான திட்டமிடலும், துணிவும், உழைப்பும் இருந்தால் போதும் என்று தொடங்கியது தான் "வாங்க அண்ணாச்சி" மளிகை கடை.
இதற்கு முன்பு 2 வருடங்களுக்கு மேலாக சமூகப்பணியில், அரசியலிலும் ஈடுபட்டுவந்திருந்தார், அப்போது அவருக்கு கிடைத்த நல் ஆசிரியர்கள் தந்த வழிகாட்டுதலின் படி தான் சொந்தக்காலில் நின்று, தேவைக்கு ஏற்ற அளவுக்கு பணம் சேர்த்த பிறகு அரசியலில் கால்பதிக்கலாம் என்று தெளிவான முடிவால் தொடங்கியது தான் வாங்கஅண்ணாச்சி.காம்.
முதற்கட்டமாக திருநெல்வேலியில் பேட்டை என்ற ஊரில் கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து VangaAnnachi.com என்ற இணையதளம் தொடங்கி திருநெல்வேலியின் பல பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் பெற்று வீட்டிற்கே நேரடியாக கொண்டு சேர்த்து வருகிறார். அடுத்தகட்டமாக இதை ஒவ்வொரு மாவட்டமாக தொடங்க உத்தேசித்துவுள்ளார், தமிழக அளவில் குறைவான விலையில் தரமான மளிகை பொருட்களை விற்கும் முதன்மையான இணைய மளிகை நிறுவனமாக உருவாக்க வேண்டும் என உழைத்து வருகிறார். தற்போது பருப்புவகைகளை மொத்தவிலைக்கும், சில்லறை விலைக்கும் தங்கள் மாவட்டத்திலே மிகக் குறைந்த விலையில் தருவது இவர்களின் சிறப்பம்சம்.
எங்களது இலட்சியம் முதல் தர மளிகை பொருட்கள் அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவேண்டும்.
bigbasket.com, grofers.com போன்ற கார்பொரேட் வணிக நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக நம்ம ஊரு vaangaannachi.com வளரட்டும் என வாழ்த்துவோமாக !