பொற்கால ஆட்சி கொடுத்த காமராசர் பற்றிய அறிய காணொளிகள்:
தமிழக முதல்வர்களின் தமிழ்நாட்டுக்கு பொற்கால ஆட்சி கொடுத்த முதல்வர் என்ற பெருமை நம்ம காமராசர் ஒருவரை மட்டுமே சேரும் காரணம் வருங்காலத்தை கணக்கில் கொண்டு அவர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள். அவற்றுள் மிக முக்கியமான சில ஏழை பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டம், இலவச பாடப்புத்தகம், பிள்ளைகள் சாதி வேறுபாடு இன்றி பழக செய்ய பள்ளிகளில் சீருடை அணியும் திட்டம், விவசாயிகளுக்கு வைகை அணை, மணிமுத்தாறு அணை, ஊரெங்கிலும் புதிய தொழிற்சாலைகள் என அவரின் 9 ஆண்டு கால ஆட்சியை 50 ஆண்டுகளை தாண்டியும் பேசி வருகிறோம்.
காமராசர் ஏன் திருமணம் செய்யவில்லை: அன்று பலரது மனத்திலும் ஓடிய கேள்வி வயசாகி கொண்டே போகிறதே ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை, நாட்டின் முதல்வருக்கு பெண் தர யாரும் முன்வரவில்லையா என்றே, இதனை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு இல்லை, இங்கிலாந்து ராணி நேரடியாக கேட்டார், சிறிது கூட யோசிக்காமல் இன்றும் என் வீட்டில்(நாட்டில்) பல பேர் திருமண வயதாகியும் கல்யாணம் செய்யாமல் வறுமையில் இருக்க நான் மட்டும் எப்படி மணம் முடிக்க முடியும் என் சமூகத்தில் தங்கைக்கு தான் முதலில் முடிக்கும் வழக்கம் என்றார். நாட்டையே தன் வீடாக நினைக்கும் எண்ணம் இனி யாருக்கும் வராது.
உலகெங்கும் போற்றும் காமராசர்:
இவரை போல் ஆட்சி புரிவோம், இவரின் ஆட்சியை தருவோம் என நகராட்சி உறுப்பினர் முதல் முதல்வர் வரை எடுத்துக்காட்டுவது நமது மக்கள் தலைவர் காமராசரையே. அவருடைய ஆட்சியில் அவர் ஆற்றிய பணிகளையே மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர். தற்போது உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் கொண்டு காமராசர் பற்றிய காணொளிகள் கட்டுரைகள் பலவும் இணையத்தில் உள்ளன, அவரது புகழ் நாளுக்கு நாள் கூடுகிறது, உலகெங்கும் உள்ள பலர் இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா? இப்படியும் ஆட்சி புரிய முடியுமா? என வியப்புடன் காமராசரை புகழ்கின்றனர்.
காமராஜரின் எளிமையான வாழ்க்கைமுறை :
ஒரு மனிதனால் இத்தனை எளிமையாக இருக்க முடியுமா? என்றால் அது காமராஜரால் மட்டுமே முடியும் என்பதே சரி. ஒரு நல்ல தலைவர் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும் . ஒரு சூழ்நிலையை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல்,
அதன் காரணத்தை குறைக்கவும், சிக்கலுக்கு தீர்வு காணவும் வேண்டும் . சிறந்த முடிவுகளை அடைய விரும்புவதில் எப்படி கடினமாக உழைத்து சுயமாக இயங்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்து காட்டு,
ஒரு மாநிலத்தை ஆளுபவர் எத்தகைய குணத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
"எளிமையே வாழ்க்கையின் உயர்ந்த பண்பு."