தமிழ் பிறந்த நாள் வாழ்த்து பாடல் | Happy Birthday Song In Tamil

பிறந்த நாள் வாழ்த்து பாடல் தமிழில்



Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் )

"Happy Birthday" என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில்

தமிழில் மனதார வாழ்த்தும்

வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.


====================================================



நீண்ட நீண்ட காலம்


நீ

நீடு வாழ வேண்டும்!




வானம் தீண்டும் தூரம்

நீ

வளர்ந்து வாழ வேண்டும்!


அன்பு வேண்டும்!

அறிவு வேண்டும்!

பண்பு வேண்டும்!

பரிவு வேண்டும்!


எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!


உலகம் பார்க்க

உனது பெயரை நிலவுத் தாளில்

எழுத வேண்டும்!


சர்க்கரைத் தமிழள்ளித்

தாலாட்டு நாள் சொல்லி

வாழ்த்துகிறோம்



பிறந்த நாள் வாழ்த்துகள்!

பிறந்த நாள் வாழ்த்துகள்!


இனிய பிறந்த நாள்

வாழ்த்துகள்!


பிறந்தநாள் வாழ்த்துகள் ---பெயர்---




பாடல்: பாவலர் அறிவுமதி (Arivumathi)

இசை : அரோல் கரோலி

குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்

/>தயாரிப்பு: ச.பார்த்தசாரதி

நன்றி: வலைத்தமிழ்.காம்