தமிழில் ஆங்கில வார்த்தைகள் English words in tamil
தமிழ் பேச தெரியுமா?
நாம் தமிழ் நாட்டில் இருக்கோம், நம் ஆட்சி மொழி தமிழ், ஆனால் நம் பேசுவதோ வேற்று மொழி கலந்த தமிழ், இதற்கான முக்கிய காரணம் என்று பார்த்தால் அஃது ஆங்கிலத்தில் Tea என்று தெரிந்த நமக்கு தமிழில் தேனீர் என்று தெரியாமல் இருப்பதே, நம் அன்றாடம் பயன்படுத்தும் வேற்று மொழி சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லை காண்போம்.
உணவில் தொடங்குவோமா!!
டீ - தேநீர்
காப்பி - குழம்பி
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
அடுத்த தலைப்பு: Next Topics
தமிழ் எழுத்து வரலாறு, தமிழ் கத்துக்கணும் - 2